Bread Pizza : வீட்டில் ப்ரெட் இருக்கா..? அப்போ இந்த சுவையான ப்ரெட் பீட்சாவை உடனே செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள் : பிரட் - 4 துண்டுகள், இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ், மோஸ்ரெல்லா சீஸ் - 200 கிராம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வேகவைத்த சோள விதைகள், பிளாக் ஆலிவ்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய். இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ் செய்ய : தக்காளி கெட்சப் - 1/2 கப், இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, சில்லி பிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில், தக்காளி கெட்சப், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். அதில் மோஸ்ரெல்லா சீஸை துருவி சேர்க்கவும்.
பிரட் துண்டுகளை எடுத்து அதில் இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ் தடவும்.
இதன் மேல் துருவிய சீஸ், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வேகவைத்த சோள விதைகள், பிளாக் ஆலிவ்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவும்.
பேனை சூடு செய்து, வெண்ணெய் சேர்க்கவும். உள்ளே பிரட் துண்டை வைத்து, பேனை மூடவும்.
சீஸ் உருகும் வரை காத்திருந்து எடுத்தால் சுவையான பிரட் பீட்சா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -