Ramzan Special Payasam: ரம்ஜான் ஸ்பெஷல்..சுவையான ஷீர் குருமா..இப்படி செய்து அசத்துங்க!
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சைப் பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து, 3 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் இந்த கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் கொழுப்பு நிறைந்த பாலை சேர்த்து சூடானதும், அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியாவை வேக விட வேண்டும்.பின் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
பின் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி, 2 சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின் வறுத்த பேரீச்சைப் பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து பாயாசத்தை வேக வைத்து இறக்கி கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார். இதை சூடாக பருகலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -