Aloo Egg Curry: இட்லி, தோசை என அனைத்துக்கும் சூப்பர் சைட் டிஷ் தயார்..உருளை முட்டைக்கறி ரெசிபி இதோ..
சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா சைட் டிஷ் முட்டைக்கறி. அதனை புதிதாக உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தால்..டபுல் டேஸ்ட் தான்..ஆலோ முட்டைக்கறி ரெசிபி இதோ..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் 1 உருளைக்கிழங்கு, 3 முட்டை, 2 பச்சைமிளகாய், 5 சின்ன வெங்காயம், 1 பெரிய வெங்காயம் நறுக்கியது, 1 தக்காளி நறுக்கியது ,1 துண்டு இஞ்சி,4 பல் பூண்டு, கருவேப்பில்லை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, 2 டேபிள் எண்ணைய் , 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி கலவை தூள், ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் ,½ டேபிள் ஸ்பூன் மிளகு பொடி ,கொத்தமல்லி சிறிது நறுக்கியது.
செய்முறை முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சிறிது கருவேப்பிலை சேர்த்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உருளைக்கிழங்கை குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்து பின் தோல்களை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி முட்டையை அரை பதமாக வேகவைத்து, முட்டையின் ஓடுகளை நீக்கி வைக்கவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு கரண்டியால் முட்டையை ஒன்றிரண்டாக பொடித்துவிட்டு அதில் சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு கரண்டியால் முட்டையை ஒன்றிரண்டாக பொடித்துவிட்டு அதில் சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -