Cellulite Home Remedy : கொழுப்பு திசுக்கள் தென்படுகிறதா? இருக்கவே இருக்கு ஆலிவ் எண்ணெய்!
இளம்வயதினர் முதல் வயதில் மூத்தோர் வரை என அனைவரும் கையாளும் பிரச்சினை கொழுப்பு திசுக்கள். அவை முற்றிலும் இயற்கையானதே எனினும் அது பலரின் தன்னம்பிக்கையை கெடுக்கிறது. இத்தகைய கொழுப்பு திசுக்களை வீட்டில் இருந்தபடியே குறைக்க சிம்பிளான ஹோம் ரெமடி இதோ..
கொழுப்பு திசுக்கள் நம் உடலில் இருக்கும் கொலாஜன் குறைப்பட்டால் ஏற்படுகிறது. கொலாஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இதை பின்பற்றுங்கள்!
முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் சீவி துருவி எடுத்து கொள்ளவும்.அதன் பிறகு ஒரு கேரட்டை தோள் சீவி துருவி கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒரு க்ளாஸ் பாட்டிலில் போட்டு கொள்ளவும்.
பின் அதனுள் ஒரு ஸ்பூன் லேவண்டர் பூக்களை சேர்த்து கொள்ளவும். அதற்கு மேல்150ml எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை ஊற்றி கொள்ளவும். பிறகு இவை அனைத்தையும் ஒரு ஸ்பூன் அல்லது குட்சி வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் துணியை விரித்து, அதனுள் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தினுள் தயார் செய்து வைத்த எண்னெய் பாட்டிலை வைத்து மிதமான சூட்டில் முப்பது நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு கண்ணாடி பாட்டிலை வெளியில் எடுத்து ஆற வைத்து எண்ணெய்யை ஃபில்டர் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் உடம்பில் தடவி மசாஜ் செய்து வந்தால் கொழுப்பு திசுக்கள் படிப்படியாக குறைய தொடங்கும். (இந்த எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.