Paneer Cheese Balls Recipe : சுடசுட அசத்தல் ஸ்நாக்ஸ்..இன்றே செய்யுங்கள் பன்னீர் சீஸ் பால்ஸ் ரெசிபி..!
தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம், வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலை, உப்பு - 1/2 தேக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி, கடலை மாவு - 2 மேசைக்கரண்டி, சோள மாவு - 1 மேசைக்கரண்டி, ப்ரோசஸ்டு சீஸ், பிரட் தூள், சோள மாவு - 3 தேக்கரண்டி, எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கடலை மாவு போட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
செய்த பன்னீர் கலவையிலிருந்து சிறிய அளவு எடுத்து இதனுள் ஒரு சிறிய துண்டு சீஸ் வைத்து மூடி நான்கு உருண்டையாக உருட்டவும். ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவும் தண்ணீரும் கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பன்னீர் பால்ஸை சோள மாவு கலவையில் முக்கி, பிறகு பிரட் தூளில் பிரட்டி, ஃப்ரீசரில் 10 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.
பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், ஃப்ரீஸரில் உள்ள பன்னீர் பால்ஸை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பன்னீர் சீஸ் பால்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -