Orange Cake Recipe : சூப்பரான ஆரஞ்சு கேக் ரெசிபி..உடனே வீட்டில் ட்ரை செய்யுங்கள்..!
தேவையான பொருட்கள் : மைதா - 1 3/4 கப், பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, ஆரஞ்சு பல்ப் - 1 பழம், ஆரஞ்சு சாறு - 2 பழங்கள், பால் - 1/2 கப், வெண்ணெய் - 2 1/2 மேசைக்கரண்டி, சர்க்கரை - 1 கப், ஆரஞ்சு தோல் - 1 பழம் துருவியது, வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி ஐசிங் செய்ய : சர்க்கரை தூள் - 1 கப், பிரெஷ் கிரீம், ஆரஞ்சு தோல் - 1 தேக்கரண்டி துருவியது.
செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இன்னொரு பாத்திரத்தில் ஆரஞ்சு பல்ப், ஆரஞ்சு ஜூஸ், பால், சர்க்கரை, துருவிய ஆரஞ்சு தோல் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆரஞ்ச் கலவையில், மைதா மாவு கலவையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.கேக் செய்யும் டின்னில் வெண்ணெய் தடவி, அடியில் பட்டர் பேப்பர் போட்டு செய்த கேக் கலவையை அதில் ஊற்றி சமம் செய்துகொள்ளவும்.
ஓவனை 180°C அளவில் 15 நிமிடங்களுக்கு சூடாக்கவும். சூடாக்கிய ஓவனில் கேக் டின்னை வைத்த 45 நிமிடங்களுக்கு 180°C அளவில் பேக் செய்யவும். 45 நிமிடங்கள் கழித்து கேக்கை எடுத்த 15 நிமிடங்களுக்கு ஆற விடவும்.
ஐசிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை மற்றும் பிரெஷ் கிரீம் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். செய்த ஐசிங்'கை ஆறிய கேக்'கின் மேல் ஊற்றவும்.
அவ்வளவு தான் அருமையான முட்டையில்லாத ஆரஞ்சு கேக் தயார்.