Immunity Boosting Foods: எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!
வீட்டில் இருக்கும் சில பொருட்களில் எதிர்ப்பு சக்தி அதிகம். அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாப்பிடுவது நல்லது.
இயற்கையால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மருந்து தேன். சுத்தமான தேனை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலில் கலந்து குடிப்பது, தேனால் இனிப்பு பண்டங்கள் செய்வது என தேனை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
வீட்டில் இருக்க கண்டிப்பாக இருக்க வேண்டிய மரங்களில் ஒன்று எலுமிச்சை என்பார்கள். அந்த அளவுக்கு எலுமிச்சையில் பலன்கள் அதிகம். எலுமிச்சை சாறு முதல் எலுமிச்சை தோல் வரை மருத்துவக் குணம் நிறைந்தது.
அதிக மருத்துவக் குணம் கொண்டதால்தான் மஞ்சள் ஆன்மீகத்திலும் இடம்பெறுகிறது. சில விஷயத்தை முறிக்கும் அளவுக்கு மஞ்சளில் மருத்துவக்குணம் உண்டு. இது நோயை உருவாக்கும் பாக்டீரியா, வைரஸுக்கு எதிராக போராடும் குணம் கொண்டது. உணவில் மஞ்சளை தவிர்க்கவே கூடாது.
நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்பிரச்னை என பல பிரச்னைகளுக்கு இஞ்சி தான் தீர்வு. அசைவத்தில் அதிகம் இஞ்சி சேர்க்கப்படுவதும் அதற்காகவே. இந்த இஞ்சியில் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருளும் அதிகம். சாப்பாடு மெனு இஞ்சி இல்லாமல் இருக்கவே கூடாது.
சளி, காய்ச்சல் என்றால் பூண்டு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பூண்டில் எதிர்ப்பு சக்தி அதிகம். பூண்டு வாசனை பிடிக்காது என சிலர் பூண்டை ஒதுக்குவார்கள்.