Oats paniyaaram recipe : குழி பணியாரம் சாப்பிடனும் போல இருக்கா? இந்த புதிய ஓட்ஸ் பணியாரத்தை வீட்டில் செய்து அசத்துங்கள்!
ங்கள் விதவிதமான பணியாரங்கள் சாப்பிட்டிருப்பீர்கள்! ஆனால் ஓட்ஸ் வைத்து செய்யப்படும் ஓட்ஸ் பணியாரம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறது ரெசிபி..வீட்டில் செய்து அசத்துங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் ஓட்ஸ் - 1 கப், தண்ணீர் - 1 1/2 கப், வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய் - நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கேரட் - 1 துருவியது, வேகவைத்த பட்டாணி, முட்டைகோஸ் துருவியது, சீரகம் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது.
செய்முறை: முதலில் ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவிடவும். பின்பு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், வேகவைத்த பட்டாணி, துருவிய முட்டைகோஸ் சேர்க்கவும்.
அடுத்து சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து பணியாரக்கல்லில் நெய் ஊற்றி பின்பு மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
அவ்வளவு தான் சுட சுட ஓட்ஸ் பணியாரம் தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -