Caramel Semiya Payasam : இனிப்பு பிரியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..சுவையான கேரமல் சேமியா பாயசம் ரெசிபி!
எந்த ஒரு விருந்து என்றாலும் பாயசத்திற்கு தனி இடம் உண்டு. அவ்வாறு இருக்கையில் ரெகுலரான பாயசம் சாப்பிட்டு போர் அடித்துவிட்டால் என்ன செய்வது?..கவலை வேண்டாம்..!இதோ இந்த புதிய கேரமல் சேமியா பாயசத்தை வீட்டில் செய்து அசத்துங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1 கப், நெய், முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலில் சிறிதளவு ஓரமாக எடுத்து வைக்கவும்.
கேரமல் சிரப் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும். சர்க்கரை கரைந்து பிரவுன் நிறமாக மாறியதும் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு, ஒரு பானில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, காய்ந்த திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். ஒரு அகல கடாயில் நெய் சேர்த்து சேமியாவை மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
ன்பு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவிடவும். சேமியா முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்த பாலை ஊற்றி கலந்து விடவும்.
சேமியா முழுதாக வெந்ததும் தயார் செய்த கேரமல் சிரப்பை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.அடுத்து ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து 2 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தான் சூப்பராம கேரமல் சேமியா பாயசம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -