Recipes Without Tomato: நோட் பண்றா..நோட் பண்றா..தக்காளி இல்லாமல் சமைக்கக்கூடிய சூப்பரான ரெசிபிகள் இதோ!

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.இதனால் சில்லரை வியாபார கடைகளில் தக்காளியின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நம் இந்திய உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவுகளில் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இல்லாமல் பல உணவுகளை சமைத்து அசத்தலாம்.

வெஜிடெபிள் புலாவ்: குக்கரில் எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேவையான காய்கறிகள், கரம் மசாலா ஆகியவற்றுடன் அரிசி தண்ணீர் சேர்த்து சமைத்தால் வெஜ் புலாவ் தயார்.
மோர் ரசம்: தயிர், இஞ்சி, சீரகம், உப்பு நன்றாக அரைத்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொதி வந்த உடன், சீரகம், கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்தால் மோர் ரசம் தயார்.
ஜீரா ரைஸ்: குக்கரில் நெய், பட்டை, கிராம்பு, சீரகம், உப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின் அரிசி மற்றும் தேவைக்கேற்ப தண்ணீரை சேர்த்து 2 விசில் வந்தவுடன் ஜீரா ரைஸ் தயார்.
நெய் சோறு: குக்கர் அல்லது கடாயில் நெய் சேர்த்து பட்டை கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் முந்திரி சேர்த்து வதக்கியதும் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து சமைத்தால் நெய் சோறு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -