Moong Dal Pakoda Recipe : மாலை வேளையில் காரசாரமான ஸ்நாக்ஸ் ரெடி..இன்றே செய்யுங்கள் பாசிப்பருப்பு பக்கோடா..!
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 கப் , உப்பு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது, கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, தண்ணீர், எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : பாசிப்பருப்பை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பாசிப்பருப்பு விழுதுதை, ஒரு கிண்ணத்தில் மாற்றி, இதில் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசையவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடாக்கி செய்து வைத்த பாசிப்பருப்பு கலவையில் இருந்து ஒரு சிறிய அளவு எடுத்து எண்ணெயில் போடவும்.
மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
அவ்வளவு தான் சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -