Masala Pasta Recipe : மழைக்காலத்தில் காரசாரமான டிஃபன் ரெசிபி..இன்றே செய்யுங்கள் மசாலா பாஸ்தா..!
தேவையான பொருட்கள் : பென்னே பாஸ்தா - 1 கப், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது, கேரட் - 1/2 கப் நறுக்கியது, பச்சை பட்டாணி - 1/2 கப், உப்பு - 2 தேக்கரண்டி, கஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், கொத்தமல்லி இலை நறுக்கியது, மோஸ்சரெல்லா சீஸ்.
செய்முறை: முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் உப்பு மற்றும் பாஸ்தாவை சேர்க்கவும். பாஸ்தா முழுமையாக வேகும் வரை சமைக்கவும் பின்னர் அவற்றை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கவும். உப்பு சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவும். பிறகு கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து தண்ணீர் சேர்த்து, நன்கு கலக்கவும். பின்பு கடாயை மூடி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் நன்றாக காய்கறிகளை சமைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும். அவ்வளவு தான் சுவையான, காரமான மசாலா பாஸ்தா சூடாக பரிமாற தயார்.