Peri Peri Paneer Sandwich: சுவையான பனீர் சாண்ட்விச் - ரெசிபி!

ஒரு பாத்திரத்தில் குடமிளகாய், வெங்காயம், தக்காளி மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சில்லி ஃப்ளேக்ஸ், சுவைக்கேற்ற உப்பு சேர்த்து, பெரி மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு மிளகாய் தூள், கருப்பு உப்பு, இலவங்கப்பட்டை உள்ளிட்டவற்றை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட வேண்டும்.

இதனுடன் குடைமிளகாய் தக்காளி வெங்காயம் சுவைக்கேற்ப உப்பு உள்ளிட்டவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி இந்த கலவையில் சேர்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால், நீங்கள் இதில் சிறிது சீஸ் அல்லது சில்லி பூண்டு சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு ப்ரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி அதன் மீது தயாரித்து வைத்துள்ள ஸ்டஃபிங்கை பரப்பி, மற்றொரு பிரட் ஸ்லைஸால் மூடி வைக்க வேண்டும்.
இப்போது சாண்ட்விச்சை கிரில் செய்து சூடாக பரிமாறலாம்.
அவ்வளவுதான் சுவையான பெரி பெரி பனீர் சாண்ட்விட்ச் தயார். இதை மயோனஸ் அல்லது கெட்செப் உடன் வைத்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -