Thanni Chutney Recipe : தேங்காய் இல்லாமல் மதுரை ஃபேமஸ் தண்ணி சட்னி..இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 5 பற்கள், பச்சை மிளகாய் - 10 கீறியது, பொட்டு கடலை - 1/2 கப், கல்லுப்பு - 1 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, உளுந்து - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, அரைத்த சட்னி, தண்ணீர்.
செய்முறை : முதலில் ஒரு பானில் எண்ணெய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பொட்டு கடலை, கல்லுப்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
பின் பானில் எண்ணெய், உளுந்து, கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்பு அரைத்த சட்னி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.