✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Egg Chat Recipe : ஜிம் செல்பவர்களுக்கான சூப்பர் ஸ்நாக்ஸ்.. முட்டை சாட் ரெசிபி இதோ!

தனுஷ்யா   |  26 Apr 2024 05:13 PM (IST)
1

முட்டை சாட் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 5, உப்பு தேவையான அளவு, கருப்பு உப்பு, மிளகாய் தூள், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புதினா கொத்தமல்லி சட்னி, சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை, நைலான் சேவ்

2

புதினா கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள் : புதினா இலை - கையளவு, கொத்தமல்லி இலை - கையளவு, பெரிய வெங்காயம் - சிறிய துண்டு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பற்கள், பச்சை மிளகாய் - 3, கல்லுப்பு - தேவைக்கு ஏற்ப, எலுமிச்சை சாறு - 1/2 பழம், தயிர் - 1 மேசைக்கரண்டி, சாட் மசாலா - 1 சிட்டிகை

3

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கி, இதனுள் முட்டைகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். முட்டைகள் வெந்தபின் தண்ணீரிலிருந்து எடுத்து, ஆற விட்டு, உரித்து வைத்துக் கொள்ளவும்.

4

ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும் பாதி அரைந்த பின், இதில் எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு அரைத்து கொண்டால், புதினா கொத்தமல்லி சட்னி தயார் ஆகி விடும்.

5

வேகவைத்த முட்டைகளை ஸ்லைஸ் போட்டு கொள்ளவும். நறுக்கிய முட்டைகளை ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல் கருப்பு உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, அரைத்த புதினா கொத்தமல்லி சட்னி மற்றும் சாட் மசாலா தூவவும்.

6

இறுதியாக இதன் மேல் கொத்தமல்லி இலை மற்றும் நைலான் சேவ் தூவவும். சத்துமிக்க அருமையான முட்டை சாட் தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Egg Chat Recipe : ஜிம் செல்பவர்களுக்கான சூப்பர் ஸ்நாக்ஸ்.. முட்டை சாட் ரெசிபி இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.