Madurai Paal Bun Recipe : அசத்தலான மதுரை பால் பன் இன்றே செய்யுங்கள்..!
தேவையான பொருட்கள் : மைதா - 1 கப் (250 மி.லி கப்), பொடித்த சர்க்கரை - 3/4 கப், சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி, பால் - 2 மேசைக்கரண்டி, தயிர் - 1/4 கப், நெய் - 1 மேசைக்கரண்டி, தண்ணீர், சர்க்கரை - 1/2 கப், எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பொடித்த சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து பால், தயிர், நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
சர்க்கரை பாகு செய்ய சாஸ் பானில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சிறிது ஒட்டும் பதம் வரும் வரை கரைக்கவும்.
அடுத்து மாவை சிறிய உருண்டைகளாக சூடான எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
பால் பன் ஆறிய பிறகு சர்க்கரை பாகில் சேர்த்து கலந்து விட்டு உடனே எடுத்து விடவும். அவ்வளவு தான் அருமையான பால் பன் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -