Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Maddur Vadai Recipe : உளுந்து, கடலை பருப்பு ஏதும் இல்லாமல் சூப்பரா ஒரு வடை செய்யனுமா? இந்த மதூர் வடை செய்யுங்க!
தேவையான பொருட்கள் : அரிசி மாவு - 1 கப், மைதா - 1/2 கப், ரவை - 1/2 கப், உப்பு, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - பொரிப்பதற்கு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, ரவை, உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
பிறகு சூடான எண்ணெய் ஊற்றி கலந்து, பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும்.
பின்பு மாவின் மேல் எண்ணெய் தடவி 15 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு மாவை சிறு அளவில் எடுத்து தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான் ருசியான மதூர் வடை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -