Jeera masala soda recipe : அஜீரணத்தால் அவதிப்படுகிறீர்களா? இதோ இந்த ஜீரா-மசாலா சோடாவை வீட்டில் செய்து அருந்துங்கள்!
நவீன காலத்தில் பல விதமான உணவுகளையும் வரையரை இல்லாமல் உண்டு பெரும்பாலானோர் அஜீரணத்தால் அவதிப்படுகின்றனர். அதில் இருந்து விடுப்பட இந்த ஜீரா-மசாலா சோடாவை வீட்டில் செய்து குடித்து பாருங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : எலுமிச்சை, சீரகம் 1/2 கப், மிளகு 2 ஸ்பூன், சர்க்கரை 250 கி, உப்பு, சாட் மசாலா 1 ஸ்பூன், தண்ணீர் 1/2 கப்.
செய்முறை : முதலில் சீரகம் மற்றும் மிளகை லேசான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, அரைத்து வைத்த சீரகம்-மிளகு தூள், உப்பு, சாட் மசாலா, தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும்.
கொதித்தவுடன் அந்த கலவையை நன்றாக ஆற விட வேண்டும்.
அதன் பின் ஒரு க்ளாஸில், கொதிக்க வைத்த சாறு, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்தால், ஜீரா-மசாலா சோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -