Iftar Drink : இஃப்தார் ஸ்பெஷல் அரேபியன் பல்பி க்ரேப் ஜூஸ்..இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : 500 கிராம் விதையில்லா கருப்பு திராட்சை, 1 கப் சர்க்கரை, 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ½ தேக்கரண்டி ரோஸ் சாறு, தேவைக்கு தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் திராட்சையை நன்றாக கழுவவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஓரமாக வைத்துவிடுங்கள்.
பிரஷர் குக்கரில் பொருந்தும் ஒரு ஸ்டீல் கிண்ணத்தில் திராட்சை தண்ணீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு பெரிய பிரஷர் குக்கரை எடுத்து, கீழே சிறிது தண்ணீர் நிரப்பி, திராட்சை கிண்ணத்தை வைத்து குக்கரை மூடி 5-6 விசில் வரை விடுங்கள்.
பிறகு ஆவி வெளியேறியதும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடுங்கள். பின் இந்த திராட்சை கலவையில் எலுமிச்சை சாறு, ரோஸ் எசன்ஸ் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -