Idly Podi Recipe : இட்லி பொடியை இப்படி செய்து பாருங்கள்..வீடே மணக்கும்!
தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய் - 2 1/2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1/2 கப், உளுத்தம் பருப்பு - 1/4 கப், வேர்க்கடலை - 1/4 கப், பொட்டு கடலை - 1/4 கப், குண்டூர் சிவப்பு மிளகாய் - 10, காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 10, துருவிய தேங்காய் - 1 கப், பூண்டு, புளி, கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு பானில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்னர் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பொட்டு கடலை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்பு ஆறவிடவும். அதே பானில் நல்லெண்ணெய் ஊற்றி, குண்டூர் சிவப்பு மிளகாய், காஷ்மீரி சிவப்பு மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
மீண்டும் அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காய், பூண்டு மற்றும் புளியை சேர்த்து சேர்த்து வறுக்கவும். வறுத்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
பின்னர் வறுத்த பருப்பு, வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.கடைசியாக வறுத்த தேங்காய், பூண்டு, புளி மற்றும் கல் உப்பு, பெருங்காய தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைக்கவும்.
அவ்வளவு தான் வீடே மணக்கும் சுவையான இட்லி பொடி தயார். சூடான இட்லியுடன் பரிமாறினால் சுவை அசத்தலாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -