Tomato Soup Recipe: குளு குளு மாலை வேளையில் சுட சுட தக்காளி சூப்..ரெசிபி இதோ..!
சில்லென்று இருக்கும் மாலை வேளையில் தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட வேண்டுமா..? இதோ இந்த சுவையான தக்காளி சூப்பை வீட்டில் செய்து அசத்துங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: தக்காளி - 10, கேரட் - 2, உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம், பூண்டு - 7 பற்கள், பிரியாணி இலை - 1, வெங்காயம் - 2 நறுக்கியது, தண்ணீர், உப்பு, மிளகு தூள், சர்க்கரை - 1 தேக்கரண்டி, பேசில் இலை.
செய்முறை: முதலில் தக்காளி'யை சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் பேன்'னில் வெண்ணெய் சேர்த்து, அதில் பூண்டு, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், அதில் கேரட் சேர்த்து வதக்கவும்.அடுத்து இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும். அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து 4 நிமிடம் கிளறவும்.
அடுத்து அதில் 500 மில்லி தண்ணீர் ஊற்றி, பேன்'னை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.15 நிமிடம் கழித்து, தக்காளி கலவையை ஆறவிடவும். ஆறிய தக்காளி கலவையை, மிக்ஸியில் போட்டு, விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை, நன்றாக வடிகட்டவும். வடிகட்டிய தக்காளி விழுதை பேன்'னில் ஊற்றி, அதில் சர்க்கரை, மிளகு தூள் மற்றும் பேசில் இலை போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி சூப் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -