Souffle Pancake Recipe : கேக் தெரியும்.. சூஃப்லி பேன்கேக் தெரியுமா? புதுவிதமான ரெசிபி இதோ!
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ஒரு இனிப்புகளில் பேன்கேக்குகளும் ஒன்று. அவ்வாறு உங்களுக்கு பிடித்த பேன்கேக்கை சாப்பிடுவதற்கு கேஃபேகளுக்கு சென்று அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா..? இதோ இந்த சிம்பிளான சூஃப்லி பேன்கேக் ரெசிபியை ட்ரை செய்து அசத்துங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: முட்டை - 4, பால் - 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது, வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, மைதா மாவு - 6 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 4 மேசைக்கரண்டி, எண்ணெய்.
செய்முறை: முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை தனி தனியாக பிரிக்கவும். அடுத்து முட்டையின் வெள்ளை கருவை பிரிட்ஜில் வைக்கவும். பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை கருவை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். பின்பு பீட் செய்த வெள்ளை கருவுடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
அதன் பின், ஒரு பேனை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும்.அடுத்து பேன்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி,பேனின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.
பிறகு பேன்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும். அவ்வளவு தான், பேனில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -