Wheat Rava Idly Recipe : சுவையும் சத்துகளும் நிறைந்த கோதுமை ரவா இட்லி..இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : கோதுமை ரவா - 1 கப், உப்பு - 1/2 தேக்கரண்டி, தயிர் - 1 கப், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து 5 நிமிடம் வறுத்து கொள்ளவும். ரவை ஆறிய உடன் உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு பேனில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
கடுகு பொறிய ஆரம்பித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவும். பிறகு தாளித்த பொருட்களை ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி, வறுத்த முந்திரியை வைத்து, ரவை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கோதுமை ரவா இட்லி தயார்.