Korean Face Mask : கண்ணாடி போன்ற சருமத்தை பெற இந்த மூன்று பொருள் போதும்!
கொரியன் சிரீஸ்களை விரும்பி பார்க்கும் உலக மக்கள், கொரியன் மக்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுறிப்பாக கொரியன் உணவுகளை சாப்பிடுவது, கொரியன் ஸ்கின் கேரை பின்பற்றுவது என மக்களின் தேர்வு காலத்திற்கு ஏற்றவாரு மாறிக்கொண்டே போகிறது.
சந்தைகளிலும் கொரியன் ஸ்கின் கேர் பிராண்டுகளுக்கு தனி மவுசு உள்ளது. விலை உயர்வாக இருக்கும் இவற்றை அனைவராலும் வாங்க முடியாது.
அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு, சூப்பரான கொரியன் ஃபேஸ் மாஸ்க்கை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், அரை ஸ்பூன் பச்சரிசி மாவு, கொஞ்சம் தேன்
முன்குறிப்பிட்ட மூன்று பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளற வேண்டும். சுத்தமான முகத்தில் இந்த கலவையை தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதற்கு நீங்கள், வீட்டில் வளரும் கற்றாழை, சந்தைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -