Sesame Laddoo : சீரற்ற மாதவிடாயா..? அப்போ இந்த எள்ளு லட்டுவை உடனே செய்யுங்க..!

தேவையான பொருட்கள் : வெள்ளை எள்ளு - 1 கப் (250 மில்லி கப் ), வேர்க்கடலை - 1/2 கப் வறுத்தது, கொப்பரை தேங்காய் - 3/4 கப் துருவியது, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, வெல்லம் - 3/4 கப் துருவியது, நெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
செய்முறை: முதலில் கடாயில் எள்ளு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.

பின்பு வறுத்த வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுக்கவும். பிறகு கொப்பரை தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
பின்பு அனைத்தையும் நன்கு ஆறவிட்டு, பின்பு மிக்ஸியில் வறுத்த எள்ளு மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பிறகு வறுத்த கொப்பரை தேங்காய் சேர்த்து அரைக்கவும், பின் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அடுத்து அரைத்த எள்ளை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் நெய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.அவ்வளவு தான் அசத்தலான எள்ளு லட்டு தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -