Cooking Tips : நீங்கள் சமைக்கும் உணவு அமிர்தம் போல் இருக்க இந்த டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்!
புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக பாலில் சாதத்தை வேக வைத்தால் சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமட்டன் குழம்பு செய்யும் போது மட்டனுடன் ஒரு சிறிய துண்டு பப்பாளி சேர்த்தால் மட்ட்ன் சீக்கிரமாக வெந்துவிடும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.
வாழைப்பூ சமைக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சமைத்தால் சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.
சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது சிறிது நெய் சேர்த்து கொண்டால் பருப்பு சீக்கிரமே வெந்துவிடும்.
வடகம், அப்பளம் போன்றவை வைக்கும் டப்பாவில் ஒரு பெருங்காய துண்டு போட்டு வைத்தால் அவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும் போது அவற்றில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்தால் அது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -