Kinnathappam Recipe : இஃப்தார் ஸ்பெஷல் சுவையான கிண்ணத்தப்பம் ரெசிபி!
தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - ½ கப், கெட்டியான தேங்காய் பால் - தேவைக்கேற்ப, சர்க்கரை - ½ கப் அல்லது தேவைக்கேற்ப, முட்டை - 1, ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - ½ தேக்கரண்டி, கிண்ணத்தில் தடவுவதற்கான எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை வடிகட்டி, பிளெண்டரில் சேர்க்கவும். அதனுள் தேங்காய்ப்பாலை ஊற்றி, மிருதுவாக அரைக்கவும். அந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
அதே பிளெண்டரில் முட்டை, சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பீட் செய்து மாவுடன் ஊற்றவும்.
பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதனுள் மாவை ஊற்றி அதன் மேல் சீரகத்தை தூவவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுள் மாவு ஊற்றிய பாத்திரத்தை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
பிறகு அதனை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி பறிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -