Butter Biscuit Recipe : டீக்கடை ஸ்டைலில் சூப்பரான பட்டர் பிஸ்கெட்.. இனி வீட்டிலே செய்யலாம்!
தேவையான பொருட்கள் : உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம், சர்க்கரை - 50 கிராம், மைதா - 150 கிராம், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டர் பேப்பர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் வெண்ணெயை பீட்டர் கொண்டு நன்றாக அடிக்கவும். அடுத்து சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் அடிக்கவும்.
பின் இதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்க்கவும். அனைத்தும் திரண்டு வரும் வரை பீட் செய்யவும்.
அந்த மாவை சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பிறகு பேக்கிங் தட்டில் அடுக்கி வைக்கவும். முள் கரண்டியில் வெண்ணெய் தடவி, செய்த உருண்டைகளை லேசாக அழுத்தவும்.
10 நிமிடம் முன் கூட்டியே ஓவனை 180°C அளவிற்கு சூடாக்கி கொள்ளவும்.
செய்த குக்கீஸை 15 நிமிடம் 180°C அளவில் பேக் செய்யவும். குக்கீஸ் ஆறியதும், பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -