Mutton Kari Dosa Recipe : காரசாரமான மட்டன் கறி தோசை இனி வீட்டிலே செய்யலாம்..ரெசிபி இதோ..!
சண்டே ஸ்பெசல் டின்னர் என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா..? யோசனையே வேண்டாம் . இந்த கார சாரமான மட்டன் கறி தோசையை உடனே செய்யுங்க..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: 200 கிராம்-மட்டன் கொத்து கறி, 3-முட்டை, 1- வெங்காயம் , 1-தக்காளி, 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டுபேஸ்ட், 1 ஸ்பூன் -மிளகு தூள் , 1/2 ஸ்பூன்- மிளகாய் தூள், 1/2 ஸ்பூன்- கரம் மசாலா, 1/2 ஸ்பூன்- சீரக தூள், 1/2 ஸ்பூன் மல்லி தூள் , 1/4 ஸ்பூன் -மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன்-கடுகு, 1/2 ஸ்பூன்- சோம்பு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய்.
மட்டனுடன்( ஆட்டிறைச்சி) மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.பின் முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொண்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
1 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான,கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு காரசாரமாகவும் மிகுந்த சுவையுடனும் இருக்கும். நீங்களும் வீட்டில் டின்னருக்கு ட்ரை பண்ணி பாருங்க.
அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய தோசை ஒன்றை ஊற்ற வேண்டும். சிறிது வெந்ததும் தோசை மீது ஒரு கரண்டி முட்டையை ஊற்றி, பின் அதற்கு மேல் ஒரு கரண்டி கறியை வைத்து தோசை முழுவது பரப்பி தேய்த்து விட வேண்டும். அதன் மேல் சிறிது மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -