French Toast Recipe : ப்ரெட் இருக்கா..? அப்போ இந்த ஃப்ரென்ச் டோஸ்ட் ரெசிபியை உடனே ட்ரை செய்யுங்க..!
தேவையான பொருட்கள் : பிரட் துண்டுகள் - 3, முட்டை - 2, பிரவுன் சுகர் - 2 மேசைக்கரண்டி, பால் - 1/2 கப் (கொதித்து ஆறியது ), பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, வெண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, இதில் பிரவுன் சுகர் போட்டு நன்கு அடிக்கவும்.
அடுத்து இதில் கொதித்து ஆறவைத்த பால், பட்டைத்தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
செய்த முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி இதில் பிரெட் துண்டை போட்டு எடுக்கவும்.
ஒரு பேனில் சிறிதளவு வெண்ணை போட்டு முட்டையில் போட்டு எடுத்த பிரெட் துண்டை போட்டு 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும்.
மேலும் சிறிதளவு வெண்ணெய் போட்டு பிரட்டின் மறுபக்கத்தை 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும். அவ்வளவு தான் சுவையான ஃப்ரென்ச் டோஸ்ட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -