Health Tips: தினம் ஒரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்? ஹெல்த் டிப்ஸ் இதோ!
நாம் மூன்று வேளை உண்பது முக்கியமல்ல. நம் உணவு சரிவிகித ஊட்டச்சத்து உடையதா என்பது தான் முக்கியம். உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம். அன்றாடம் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா?
பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். தேகத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம்,
பழவகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. அதனால் அன்றாடம் ஒரு பழவகை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
அன்றாடம் ஒரு பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். எப்படி எனக் கேட்கிறீர்களா? பழங்களில் உள்ள ஃப்ளாவனாய்ட்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், விடாப்பிடியாக படிந்திருக்கு கொழுப்பைக் கரைக்கும்..
அன்றாடம் ஏதேனும் ஒரு பழம் எடுத்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைத்துவிடும். வைட்டமின் சி நம் உடம்பில் இருந்து எளிதில் வெளியேறிவிடும்.
பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும். நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும்.
பழங்கள் சாப்பிடச் சாப்பிட சருமம் மினுமினுக்கும். கேசம் பளபளக்கும். அதனால் சரும பராமரிப்பு, கேச பராமரிப்பை உணவுப் பழக்கத்திலிருந்தே நீங்கள் கொண்டு வரலாம்.