Chocolate Chip Muffins Recipe : கிறிஸ்துமஸிற்கு அசத்தலான சாக்லேட் சிப் மஃபின்ஸ்..ரெசிபி இதோ..!
தேவையான பொருட்கள் : மைதா - 1 1/2 கப், பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, சர்க்கரை - 1 கப், முட்டை - 1, வெண்ணை - 1/4 கப் உருகியது, பால் - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, சாக்லேட் சிப் - 3/4 கப்.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
மற்றோரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து ஊற்றி அடித்த பின், இதில் உருக்கிய வெண்ணை, பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து, முட்டை கலவையை மாவு கலவையுடைன் சேர்த்து கலக்கவும். இதனுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
மஃபின் தட்டில் முக்கால் அளவு மாவை ஊற்றவும். ஓவனை முன் கூட்டியே பத்து நிமிடம் 180 C யில் சூடாக்கி கொள்ளவும்.
மஃபின் தட்டை 20 நிமிடங்கள் 180 C யில் பேக் செய்யவும். அவ்வளாவு தான் சாக்லேட் சிப் மஃபின் தயார்.