Plum Cake Recipe: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! ப்ளம் கேக் ரெசிபி!
முந்திரி, பிஸ்தா, வால்நட் ஆகியவற்றை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசோள மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் அந்த கலவை நன்றாக கூழ் பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.
மைதா மாவினை சலித்தும், பட்டரை உருக்கியும், செர்ரி பழத்தினை சிறு சிறு துண்டாக வெட்டியும் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, பட்டர் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும். முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து, மைதா சேர்த்து பிசைந்த கலவையில் முட்டையை ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.
இந்த கலவையில் பால் சேர்த்து கலந்து, பின்பு கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.
வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களையும், பொடித்த நட்ஸ்களையும் இந்த கலவையின் மீது தூவி விட வேண்டும்.
ப்ரீ ஹீட் செய்து பின்பு ஓவனின் கேக் டின்னை வைத்து சுமார் 40 நிமிடத்திற்கு பின் எடுக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -