Cheesy Vegetable Nachos Recipe: சில்லென்று இருக்கும் மாலை வேளையில் காரசாரமான ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா..? இதோ இந்த சீஸி வெஜிடபிள் நாச்சோஸை வீட்டில் செய்து அசத்துங்கள்!
மேகம் விடாமல் தூறிக் கொண்டே இருக்கும் மாலை வேளையில் காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா..? இதோ இந்த சிம்பிளான சீஸி வெஜிடபிள் நாச்சோஸை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: நாச்சோஸ் சிப்ஸ், மோஸ்ரெல்லா சீஸ் - 200 கிராம், பச்சை குடைமிளகாய் - 1 கப் நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் - 1 கப் நறுக்கியது, சோள விதைகள் - 1 கப் வேகவைத்த’பிளாக் ஆலிவ்ஸ், க்ரீன் ஆலிவ்ஸ், இட்டாலியன் சீசனிங் - 2 தேக்கரண்டி, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தக்காளி கெட்சப் - 1 1/2 மேசைக்கரண்டி.
செய்முறை: முதலில் மோஸரெல்லா சீஸ்ஸை துருவவும். பிறகு ஒரு பாத்திரத்தில், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வேகவைத்த சோள விதைகள், பிளாக் ஆலிவ்ஸ், க்ரீன் ஆலிவ்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், மிளகு தூள், உப்பு மற்றும் தக்காளி கெட்சப் சேர்த்து கலக்கவும்.
பிறகு மைக்ரோவேவ் செஃப் தட்டில் நச்சோஸ் சிப்ஸ் வைத்து, அதன் மேல் செய்த சீஸ் கலவையை வைக்கவும்.
அதை ஒரு பேனில் வைத்து, பேனை மூடி 15 நிமிடம் சூடு படுத்தவும்.
அவ்வளவு தான் சுவையான சீஸி வெஜிடபிள் நச்சோஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -