Bread Cookies Recipe: அடேயப்பா..ப்ரெட்டை வைத்து குக்கீஸ் கூட செய்யலாமா? இதோ சுவையான ப்ரெட் குக்கீஸ் ரெசிபி!
பொதுவாக ப்ரெட்டை பயன்படுத்தி சான்விட்ச், ப்ரெட் டோஸ்ட் ஆகியவை செய்து தான் நாம் சுவைத்திருப்போம். ஆனால் ப்ரெட்டில் குக்கீஸ் செய்யலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஆமாம்..சுவையான சில்பிளான குக்கீஸை ப்ரெட் வைத்தே செய்யலாம். ரெசிபி இதோ..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம், சர்க்கரை - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, முட்டை - 1, பிரட் தூள், சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப், வால்நட்ஸ் - 1/2 கப் நறுக்கியது.
செய்முறை: முதலில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடரை, பாத்திரத்தில் சலித்து எடுத்து கொள்ளவும். பிறகு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்து கொள்ளவும். அதில் முட்டை சேர்த்து பீட் செய்யவும்.. பிறகு அதில் மாவு கலவை, பிரட் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அடுத்து அதில் சாக்லேட் சிப்ஸ், மற்றும் வால்நட்ஸ் சேர்த்து கிளறவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி பேக்கிங் தட்டில் வைக்கவும்.
ஓவனை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும். பிறகு குக்கீஸை 180°C அளவில் 20 நிமிடம் பேக் செய்யவும். அவ்வளவு தான் சுவையான பிரட் குக்கீஸ் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -