Mango Jam:மாம்பழ சீசன் வந்தாச்சு! சுவையான ஜாம் செய்து அசத்துங்க! ரெசிபி!
மாம்பழ ஜாம் செய்ய நல்ல பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்யவும். தோலை நீக்கி விட்டு, மாம்பழ விழுதை மட்டும் எடுத்துகொள்ளவும். இதே அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையஅரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நான் ஸ்டிக் பேனை(pan) அடுப்பில் வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
மாம்பழம் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும். இப்போது சர்க்கரையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
சர்க்கரை உருகி மாம்பழத்துடன் சேர்ந்து அல்வா பதம் வரும். கரண்டியால் கிண்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் வந்ததும் 4 ஸ்பூன் மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஓரளவு போனதும் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். மாம்பழ ஜாம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -