Tomato Kurma: மொறு மொறு தோசைக்கு நல்ல சாய்ஸ் - ஸ்பெசல் தக்காளி குருமா ரெசிபி!
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் - 1/2 முடி, பழுத்த பெரிய தக்காளி - 2 ( துண்டுகளாக்கியது), பட்டை - 1, லவங்கம் -1, சோம்பு-1/2 ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், முந்திரிப்பருப்பு - 4, பொட்டுக்கடலை - 1/2 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, உள்ளிட்டவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
கூடவே 2 பச்சை மிளகாய் கீறி போட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலையை, சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். (இல்லை என்றால் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிப்போட்டு வதக்கிக் கொள்ளலாம்)
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் தக்காளி சேர்த்த விழுதை இதனுடன் சேர்த்து, குருமாவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள், மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு, குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில்வைத்து வேகவிட வேண்டும்.
2 விசில் வந்ததும், அடுப்பை அணைத்து விட்டு பிரஷர் அடங்கியதும், அதில் சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான தக்காளி குருமா தயாராகி விட்டது. இந்த குருமா இட்லி, தோசை, சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -