Health Tips:பழங்களை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை? ஆயுர்வேதம் மருத்துவர்களின் பரிந்துரைகள்!
பழங்கள் சாப்பிடுவது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், பழங்களை எப்போது, எப்படி சாப்பிடுவது நல்லது என ஆயுர்வேதம் சொல்வதை அறிவுறுத்தல்களை காணலாம்.
பழங்களை எப்போது சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். சமைத்த உணவுகளை சாப்பிட பிறகு எந்த பழங்களை சாப்பிட கூடாது. இது பித்தம், வாதம், கபம் உள்ளிட்டவற்றை சீராக செயல்பட உதவுகிறது.
பழங்களை தனியாக சாப்பிடுவதே சிறந்தது என்கிறது ஆயுர்வேதம். ஏனெனில், சில பழங்களை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவற்றை சீராக இயங்க உதவும் பழங்கள் நிறைய இருக்கின்றன. உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். உதாணரமாக தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது பித்தம் அதிகரிக்காமல் இருக்க உதவும்.
அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்கள் (சீசனல் பழங்கள்) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆயுர்வேதம். 5
பழங்கள் உடல்நலனுக்கு நன்மைகள் தரும் என்றாலும் அதிகமாக சாப்பிட கூடாது என்கிறது ஆயுர்வேதம். அளவுடன் சாப்பிட வேண்டும். உங்கள் உடல் உங்களுக்கு என்ன சொல்கிறது என்பது கேளுங்கள்.