Hair Growth Tips:தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்த எளிதான வழி - இதைப் படிங்க!
ஜான்சி ராணி | 15 May 2024 04:17 PM (IST)
1
முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சிலவற்றை செய்யலாம். தேங்காய் பால், கற்றாழலை ஜெல், உள்ளிட்டவற்றை தலையில் பேக் போட்டு 30 நிமிடங்களாக ஊற வைத்து குளிர்ந்த நீரில் தலை அலசலாம்.
2
பீட்ருட் சத்துக்கள் நிறைந்தது என்பது நாம் அறிந்ததே. தலைமுடிக்கு இயற்கையாக கலர் செய்வதற்கு மருதாணியுடன் பீட்ரூட் பயன்படுத்தலாம்.அப்படியே தலை குளிக்கும்போது ஷாம்பூ உடன் பயன்படுத்தலாம்.
3
இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி நிலைக்கு வந்ததும் அதில் துருவிய பீட்ரூட், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
4
பீட்ரூட் நன்றாக கொதித்ததும் அதை வடிக்கட்ட வேண்டும். தண்ணீர் நன்றாக ஆற விட வேண்டும்.
5
பீட்ரூட் தண்ணீர் ஆறியதும் இதை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.