Hangover Relief : ஹேங்கோவர் வராமல் இருக்க என்ன செய்யலாம்? டிப்ஸ் இதோ!
இன்றைய சூழலில் பலரும் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஹேங்கோவர் பிரச்சினையால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஹேங்கோவர் பிரச்சினை வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்
அளவாக குடிக்க வேண்டும் : அளவுக்கு அதிகமாக குடித்தால்தான் போதை கிடைக்கும் என்று அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. எப்போதாவது அளவாக குடித்து கொள்ளலாம்.
உணவும் மதுவும் : உணவு சாப்பிட்ட பின் மது அருந்த கூடாது. அதுபோல், மது அருந்திவிட்ட உடன் அதிகமாக உணவு சாப்பிட கூடாது. சாப்பிட்டுக்கொண்டேதான் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சைட் டிஷ் : மதுவுடன் ஊறுகாய், சிப்ஸ், பொறித்த உணவுகளை உண்பதற்கு பதிலாக ஆப்பிள், கொய்யா போன்ற பழ வகைகளையும் கேரட், வெள்ளரி போன்ற காய்கறி வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி சாப்பிட்டால், அசிடிக் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறையலாம். பழம், காய்கறி மட்டும் போதாது புரதம், கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிக்சிங் : மது அருந்தினால், நீரிழப்பு ஏற்படும். இதனால் தலைவலி, தலைசுற்றல் ஏற்படும். இந்த பிரச்சினையை தவிர்க்க மதுவுடன் அதிக தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். கடையில் கிடைக்கும் குளிர்பானங்கள், சோடா வகைகளை அளவாக பயன்படுத்தவும்
ஹேங்கோவரை போக்கும் அற்புதங்கள் : தவிர்க்க முடியாத காரணங்களால் ஹேங்கோவர் ஏற்பட்டால், கெட்டியான மோர், லெமன் டீ, கொய்யா இலை டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். இதை உட்கொண்டால், பிரச்சினைக்கு தீர்வு காண அதிக வாய்ப்புள்ளது
பின்குறிப்பு : இந்த பதிவு எந்த வகையிலும், மது அருந்தும் பழக்கத்தை ஆதரிக்கவில்லை. இது ஒரு பொதுவான தகவல் மட்டுமே. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், முடிந்தவரை மது பக்கமே செல்ல வேண்டாம்