Instant Carrot Dosa : இன்ஸ்டண்ட் கேரட் தோசை.. இந்த மாதிரி செய்து அசத்துங்க!
வீட்டில் தோசை மாவு இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து ஆரோக்கியமான கேரட் தோசை செய்யலாம். வாங்க இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை சேர்க்கவும், இதனுடன் துருவிய முக்கால் கப் தேங்காய், 5 சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு, ரவையை அளந்த கப்பால் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
இதை நன்றாக அரைத்து எடுத்து, ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இதை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
இந்த மாவை மூடி போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். இப்போது ரவை நன்றாக ஊறி மாவு சற்று கெட்டி பதத்திற்கு மாறி இருக்கும். உங்களுக்கு வேண்டுமென்றால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளலாம்.
இதை வழக்கம் போல் தோசை கல்லில் தோசையாக வார்த்து, தோசையின் மீது துருவிய கேரட்டை சேர்த்து, திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதை நெய் ஊற்றி செய்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
அவ்வளவு தான் சுவையான இன்ஸ்டண்ட் கேரட் தோசை தயார். இதை கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -