Home Care : வீட்டில் விஷ பூச்சிகள், பாம்புகள் தொல்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகதான்!
அனுஷ் ச | 23 Jul 2024 11:04 AM (IST)
1
எறும்புகள் வரும் இடத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை தூவிவிட்டால் எறும்புகள் வராது.
2
சமையல் செய்த பாத்திரங்களை கழுவி முடித்துவிட்டு சிங்கிள் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவிவிட்டால் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.
3
பல்லிகள் வரும் இடத்தில் வெங்காய துண்டுகளை போட்டால், அந்த வாடைக்கு பல்லிகள் வராது.
4
தோட்டத்தில், வீட்டுக்கு வெளியில் துளசி செடிகள், தும்பை செடிகள் வளர்த்தால் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வராது.
5
வீட்டில் எலி நடமாட்டம் அதிகமாக இருந்தால் புதினா இலைகளை தூவிவிட்டால் எலி தொல்லை இருக்காது.
6
வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வீட்டில் தெளித்துவிட்டால் ஈக்கள் வராது.