Oats: தினமும் ஓட்ஸ் சாப்பிடலாமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன?
தினமும் ஒருமுறை ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொளவது உடல்நலனுக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா பரிந்துரைக்கிறார். ”ஓட்ஸ் எடை குறைக்க உதவுகிறது. தினமும் பழங்களுடன் சாப்பிட்டு வந்தால், அவை பலனளிக்கும். அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும்.” என்று அவர் சொல்கிறார். மேலும், உடல் எடை குறைக்க வேண்டாம் என்பவர்களும் ஆரோக்கியத்திற்காக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஓட்ஸ் சாப்பிடலான் என்கிறார் அர்ச்சனா.
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் ஃபைபர் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ அல்லது வாழைப்பழங்கள் போன்ற உங்களுக்கு விருப்பமான எந்தப் பழத்தையும் ஓட்ஸ் உடன் சேர்த்து ஸ்மூத்தி செய்யலாம். சாக்லேட் சிரப்புடன் அரைத்த ஓட்மீல் அல்லது ஓட் மாவு சேர்க்கவும். இனிப்புக்கு, தேன் அல்லது மேப்பிள் சிரப் சேர்க்கவும்.
கிச்சடி ஆரோக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில், காய்கறி, தாளிக்க பருப்பு சேர்த்து சமைக்கப்படும். சாதாரண ஓட்ஸை எடுத்து, விருப்பமான அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும். நீங்கள் பீன்ஸ், தக்காளி, பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு, கேரட், பெல் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை மற்றும் காளான்களையும் சேர்க்கலாம். ருசியான ஆரோக்கியமான ஸ்பைசி ஓட்ஸ் ரெடி.
rolled oats-ஐக் கொண்டு தேங்காய் மற்றும் மசாலாப்பொருள்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய துரித காலை உணவு தான் தேங்காய் ஓட்ஸ். தயிருடன் சேர்ந்து இதனைச்சாப்பிடலாம்.