Fitness Tips : உடல் பருமனா இருக்கு..ஆனா பசியை கட்டுப்படுத்தவே முடியலையா? அப்போ இதை செய்யுங்க!
நாம் அவசரமாக சாப்பிடும் போது அளவுக்கு அதிகமான உணவை சாப்பிட்டுவிடுவோம். இதனால் மெதுவாக உங்கள் உணவை சாப்பிடுவது அவசியமாகிறது.
சாப்பிடும் போது பலருக்கும் போன் அல்லது டிவி இல்லை என்றால் சாப்பாடே இறங்காது. அவ்வாறு செய்யாமல் சாப்பிடும் போது உங்கள் முழு கவனத்தையும் உணவின் மீது வைத்து உண்ணுங்கள்.
சாப்பிடும் அளவை குறைக்க வேண்டுமென்றால் அதிகமான தண்ணீரை குடித்தாக வேண்டும். உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்த தவிர்க்க வேண்டாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ககார்போஹைட்ரேட்டை குறைத்து புரதம் நிறைந்த உணவை உண்ணலாம், இது நீண்ட நேரம் பசி ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். இது உங்கள் வயிற்றை எளிதில் நிரப்பிவிடும்.
மன அழுத்தம் ஏற்படும் போது கார்டிசோல் என்னும் ஹார்மோன் உற்பத்தி அதிகமாகி அது அதீத பசியைத் தூண்டும்
உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் முக்கியமானது. இதனால் போதிய தூக்கம் பெறுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.