Refrigerator Cleaning Tips:ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி? மேஜிக் லிக்விட் தயாரிக்கும் முறை இதோ!
வீடுகளில் ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வது எளிதானது அல்ல. மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சுத்தம் செய்தாலே போதுமானது என்று சொல்லப்படுகிறது. அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை எழுத்து வெளியே வைத்துவிட்டு தண்ணீரை கொண்டு ஃப்ரிட்ஜ் முழுவதும் நன்றாக துடைத்து எடுக்கவும். ஃப்ரிட்ஜில் எதை ஸ்டோர் செய்தாலும் தனியாக டப்பாவொலோ இல்லை மூடி இருக்கும் பாத்திரத்திலோ செய்வது நல்லது. உணவுப் பொருட்களை மூடி வைத்த பாத்திரத்தில் வைப்பது நல்லது.
இதை சுத்தம் செய்யும் லிக்விட் செய்வது மிகவும் எளிதானது. ஒரு பாத்திரத்தில் 2 பெரிய டம்பளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். இதில் மூன்று பழங்களின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அதோடு, ஒரு கப் வொயிட் வினிகர், அரை கப் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்யவும்.
இந்த க்ளீனிங் லிக்விட் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை க்ளீன் செய்யலாம். இது துர்நாற்றத்தை அகற்றும்.
நன்றாக சுத்தம் செய்துவிடு குறைந்தது ஒரு மணி நேரம் ஃப்ரிட்டை திறந்து வைத்துவிடுங்கள். நன்ராக காற்றோட்டமாக இருக்க வேண்டும். பிறகு பயன்படுத்த தொடங்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -