Homemade Protein Powder:வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்? - இதோ ரெசிபி!
காலையில் எழுந்ததும் டீ,காஃபி, பால் குடிக்கும் பழக்கம் உள்ளது.குழந்தைகளுக்கும் பாலில் கடைகளில் கிடைக்கும் ஏதாவது ஒரு மால்ட் பீவ்ரேஷ் கொடுப்போம். ஆனால், வீட்டிலேயே தயாரிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா உள்ளிட்டவற்றை வைத்து புரோட்டீன் மிக்ஸ் தயாரிக்கலாம். இவற்றை கடாயில் நன்றாக வறுக்கவும். இதை ஆறவிடவும்.
பாதாம், முந்திரி உள்ளிட்டவற்றில் தலா 50 கிராம் சேர்த்தால் போதுமானது. எவ்வளவு நாள் வைத்திருக்கபோகிறீர்கள், எவ்வளவு பேருக்கு தயாரிக்கிறீர்கள் என்பதை பொருத்து அளவு மாறுபடும்.
சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, சியா, எள் ஆகியவற்றில் சிறிதளவு சேர்க்கலாம்.
ஓட்ஸ், பொட்டுக்கடலையும் வறுத்து சேர்க்கலாம். தேவையெனில் இதில் கோக்கோ பவுடர் சேர்கலாம்.
வறுத்த வைத்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இதை பாலில் கலந்து குடிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -