Vegetable Stew:கேரளா ஸ்டைலில் வெஜிடபிள் குருமா - எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கோங்க!
ஒரு நான் ஸ்டிக் பேனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், இரண்டு கிராம்பு சேர்க்கவும்.பட்டை சிறிய துண்டு, இரண்டு ஏலக்காய் சேர்க்கவும்.
இதை நில நொடிகள் வதக்கி விட்டு ஒரு நறுக்கிய வெங்கயம் சேர்த்துவ் வதக்கி விடவும். பின் ஒரு நறுக்கிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, ஒரு நறுக்கிய கேரட், 8 நறுக்கிய பீன்ஸ், பச்சை பட்டாணி 5 டேபிள் ஸ்பூன், காலி ஃபிளவர் கால் கப், நீளவாக்கில் வெட்டிய இஞ்சி ஒரு துண்டு, 5 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
இதை ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு பின் ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். இதை மூடி விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
பின் மூடியை திறந்து இரண்டரை கப் தேங்காய் பாலை சேர்த்து 8 நிமிடம் வேக விடவும். இப்போது மூடியை திறந்து இரண்டு ஸ்பூன் திக்கான தேங்காய் பால், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான காய்கறி ஸ்டீவ் தயார். இது இடியாப்பத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.