Soft Idli Batter Tips: இட்லி மிருதுவாக இருக்க என்ன செய்வது? இதோ டிப்ஸ்!
அரிசிக்கு எவ்வளவு உளுந்து ஊற வைக்கின்றோம் என்பது மிகவும் முக்கியம். 4 டம்ளர் இட்லி அரிசிக்கு 1 டம்ளர் உளுந்து ஊற வைக்க வேண்டும். இதுதான் சரியான அளவு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉளுந்தை குறைந்ததது மூன்று முறை நன்றாக கழுவி விட்டு நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அரிசி அளந்த அதே கப்பில் அரை கப் அளவு ஜவ்வரிசியை ஊற வைக்கவும். இதை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது இவை அனைத்தும் அரைப்பதற்கு தயாராகி விட்டது.
உளுந்தை அரைத்து எடுத்த பின் கிரண்டரை அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து விட்டு பின் அரிசியை சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி அரைத்தால் மாவு தெரிக்காமல் இருக்கும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கரைத்து, அதன் மீது உபயோகப்படுத்தாத ஒரு அகல்விளக்கை வைத்து மூடி விட வேண்டும். இப்படி வைப்பதால் மாவு அதிகமாக புளிக்காமல் தேவையான அளவில் புளித்திருக்கும்
பாத்திரத்தில் முக்கால் பாகம் அளவு மட்டுமே மாவு இருக்க வேண்டும். நீங்கள் பாத்திரம் நிரம்பும் படி மாவை வைத்தால் மாவு காலையில் பாத்திரத்தில் இருந்து கீழே வழிந்து ஊற்றி இருக்கும்.
காலையில் நீங்கள் மாவை திறந்து பார்த்தால் நன்றாக பொங்கி வந்திருக்கும். இப்போது நீங்கள் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து இட்லி ஊற்றலாம்.அதிக தண்ணீராகவோ அல்லது அதிக கெட்டியாகவோ இருந்தால் இட்லி சரியாக வராது. இப்போது இந்த மாவில் இட்லி ஊற்றினால் இட்லி மிருதுவாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -