Pudding Recipe : புட்டிங் செய்வது இவ்வளவு ஈசினு தெரிஞ்சா.. நீங்க கண்டிப்பா ட்ரை பண்ணுவிங்க தானே!
ஒரு கிண்ணத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றவும். இதனுடன் அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அல்லது, சிறிது எலக்காய் தூள், அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு ப்ளெண்டர் அல்லது கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App250ml பாலை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும். இப்போது நல்ல வட்டமான ஷேப்பில் உள்ள ஒரு சில்வர் கிண்ணத்தில் அரை ஸ்பூன் நெய்யை உள்பக்கம் முழுவதும் தடவி விட வேண்டும். பின் தயார் செய்து வைத்துள்ள கலவையை கிண்ணத்தில் ஊற்ற வேண்டும்.
ஒரு அலுமினியம் ஃபாயில் ஷீட் கொண்டு இந்த கிண்ணத்தை நன்றாக மூடி விட வேண்டும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கால் பாகத்திற்கும் சற்று அதிக்கமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீர்குள் பாத்திரத்தை வைக்கும் ஸ்டாண்டு வைக்க வேண்டும்.
முட்டை கலவையை ஊற்றி வைத்துள்ள கிண்ணத்தை இந்த ஸ்டாண்டின் மீது வைக்க வேண்டும். இப்போது கடாயை ஒரு மூடி கொண்டு மூடி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 35 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
இப்போது மூடியை திறந்து விட்டு, ஃபாயில் ஷீட்டை எடுத்து விட்டு, ஒரு கரண்டியை புட்டிங்கிற்குள் விட்டு வெந்து விட்டதா என பார்த்துக் கொள்ள வேண்டும். கத்தியில் எதுவும் ஒட்டவில்லையென்றால் புட்டிங் வெந்து விட்டது என்று அர்த்தம். ஒருவேளை வேகாவிட்டால் மேலும் சிறிது நேரம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான புட்டிங் ரெடி. இதை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து பரிமாறலாம். அல்லது 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து வெட்டி பரிமாறலாம். சுவை சூப்பரா இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -