Cooking Tips : சப்பாத்தி செய்யும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!
சப்பாத்திக்கு வீட்டில் அரைக்கும் கோதுமை மாவு பயன்படுத்துவது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாப்பாத்தி மாவை குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை பிசைவது அவசியம். பிறகு அதனை 30 நிமிடங்கள் வரை ஓரமாக வைத்துவிடுங்கள். ஒருவேளை அவசரமாக செய்ய வேண்டும் என்றால் தண்ணீரை குறைத்து சிறிது பழைய சாத நீரை சேர்த்து பிசைந்திடுங்கள்.
மாவை ஊற வைக்கும் போது டைட்டான டப்பாவில் போட்டு முடி ஊற வைப்பது அவசியம்.
சப்பாத்தியை தேய்க்கும் முன் இரு பக்கமும் ஒரே அளவில் கோதுமை மாவை புரட்டி எடுத்து தேயுங்கள்.
தோசை திருப்பி கொண்டு சப்பாத்தியின் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் சப்பாத்தியின் மேல் ஓட்டை விழுந்துவிடும்.
சப்பாத்தி நன்றாக உப்பி வந்தால் அது முழுமையாக வெந்துவிட்டதென அர்த்தம். அந்த சப்பாத்தி ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்குமாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -